காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி: இளம் இந்திய இணை சுனைனா- அனாஹத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி: இளம் இந்திய இணை சுனைனா- அனாஹத் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 Aug 2022 1:22 PM GMT (Updated: 4 Aug 2022 1:23 PM GMT)

இந்தியாவின் சுனைனா சாரா குருவில்லா (23 வயது) -அனாஹத் சிங் (14 வயது) இணை வெற்றி பெற்றனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

7-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனைனா சாரா குருவில்லா (23 வயது) -அனாஹத் சிங் (14 வயது) இணை இலங்கையை சேர்ந்த எஹெனி-சனித்மா ஜோடியுடன் மோதினர்.

இந்த போட்டியில் இந்திய இணை 11-9, 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய ஜோடி ஆஸ்திரேலியாவின் டோனா அவுஸ்லோபன் மற்றும் ரேச்சல் க்ரின்ஹாமை எதிர்கொள்கிறார்கள்.


Next Story