காமன்வெல்த் போட்டி- தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் ஆக்கி அணி ..! முதல் போட்டியில் கானா அணியுடன் மோதல்


காமன்வெல்த்  போட்டி-  தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் ஆக்கி அணி  ..! முதல் போட்டியில் கானா அணியுடன்  மோதல்
x

Image Courtesy : Hockey India Twitter 

தினத்தந்தி 29 July 2022 8:40 AM GMT (Updated: 29 July 2022 8:40 AM GMT)

இன்று நடக்கும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா -கானா அணிகள் மோதுகின்றன

பர்மிங்காம்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். , காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் -கானா அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story