காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டி : இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது..!


காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டி : இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது..!
x

Image Courtesy : Team India Twitter 

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது

பர்மிங்காம் ,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது

இதில் நேற்று லான் பவுல்ஸ் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெற்றனர்.

இதில் வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


Next Story