காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தங்கம் வென்று அசத்தல்


காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தங்கம் வென்று அசத்தல்
x

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தங்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்க்ம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான (57 கிலோ) மல்யுத்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா நைஜீரியாவின் எபிகெவெனிமோ வெல்சனை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் ரவிக்குமார் தஹியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதன் மூலம் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த பதக்கத்தின் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா 10 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.


Next Story