காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்தியாவின் சிவா தாபா வெற்றி


காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்தியாவின் சிவா தாபா வெற்றி
x

Image Tweeted By @BFI_official

பாகிஸ்தானின் சுலேமான் பலோச்சை வீழ்த்தி இந்திய வீரரான சிவா தாபா முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

தொடக்க விழா நேற்று முடிவடைந்த நிலையில் இன்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் குத்துசண்டை போட்டியில் 63.5 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் பாகிஸ்தானின் சுலேமான் பலோச்சை வீழ்த்தி இந்திய வீரரான சிவா தாபா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

28 வயதான சிவா தாபா இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story