காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் விவரம்..!


காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் விவரம்..!
x

தமிழகத்தில் இருந்து தடகள மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 8 வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

பர்மிங்காம்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

இதில் தமிழகத்தில் இருந்து தடகள மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 8 வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

ஆரோக்கிய ராஜ் ,நாகநாதன் பாண்டி,ராஜேஷ் ரமேஷ் ,பிரவீன் சித்திரைவேல் ,மஞ்சு பாலா சிங் ஆகியோர் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.மேலும் சரத் கமல் ,சத்யன் ஞான சேகரன் ரீத் ஷிகா ஆகியோர் டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும் களம் காண இறங்குகின்றனர்.


Next Story