குமாரபாளையத்தில்2,150 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்


குமாரபாளையத்தில்2,150 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:50 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில்2,150 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்

நாமக்கல்

குமாரபாளையம்

தமிழக அரசின் தட்டச்சு தேர்வு 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2,150 மாணவ, மாணவிகள் குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு மையத்தில் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர்.

ஆங்கிலத்தில் மொத்தம் 1,391 மாணவ-மாணவிகள் அதில், இளநிலையில் 868 மாணவ-மாணவிகளும், முதுநிலையில் 523 மாணவ-மாணவிகளும். தமிழில் மொத்தம் 759 மாணவ-மாணவிகள் அதில், இளநிலையில் 447 மாணவ- மாணவிகளும். முதுநிலையில் 312 மாணவ-மாணவிகளும் பதிவு செய்துள்ளனர். தட்டச்சு தேர்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஊக்கதுடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர் என்று முதன்மை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.


Next Story