திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா


திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா
x

சிறப்பு அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் வீதியுலா சென்ற காட்சி

ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 24-ம் தேதி நடைபெறுகிறது.

செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில், 2025-ஆம் ஆண்டிற்கான, திரிபுரசுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 24-ம்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து அலங்கார விமானம், தொட்டி உற்சவம், சந்திரபிரபை, யானை வாகனம், சங்குதீர்த்த தீர்த்தவாரி, கிரி பிரதஷணம், துவஜா அவரோஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் 29-ம்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளன. கோவில் செயல் அலுவலர் புவியரசு, தக்கர் குமரவேல், சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், மற்றும் கிராம மக்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story