சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தொடங்கியது


சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தொடங்கியது
x

ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு வெங்கடாசலபதி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவ பெருந் திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் வெங்கடாசலபதி உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. சாத்தூரப்பன் என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், பன்னீர், ஜவ்வாது, இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திவ்யப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெறும்.

1 More update

Next Story