தாமரைகுளம் பதியில் அகிலத்திரட்டு அம்மானை உதய தினவிழா


தாமரைகுளம் பதியில் அகிலத்திரட்டு அம்மானை உதய தினவிழா
x

அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவையொட்டி கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி

அகிலத்திரட்டு அம்மானை வழங்கிய தென்தாமரைகுளம் தாமரைகுளம் பதியில் அகிலத்திரட்டு அம்மானை உதயதினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7.40 மணிக்கு அகிலத்திரட்டு அம்மானை உதயதின யாத்திரைக் குழுவினரை வரவேற்றல், 8 மணிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.

காலை 8.15 மணிக்கு அகிலத்திரட்டு உதயதின யாத்திரை குழுவினர், பதிகள், நிழல் தாங்கல்கள் சார்ந்த அன்பர்கள் மற்றும் அன்புக்கொடி மக்களுடன் பதிவலம் வருதல், 8.30 மணிக்கு சிற்றுண்டி தர்மம் வழங்குதல், 9 மணிக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 10 மணிக்கு பதிகள், தாங்கல்கள், அய்யாவழி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர கோவில்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

11 மணிக்கு சிறப்பு திருஏடு வாசிப்பு மற்றும் பாராயணம் 11.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசுகள் வழங்குதல், பகல் 12 மணிக்கு பணிவிடை மற்றும் உச்சிப்படிப்பு, 12.30 மணிக்கு அன்னதர்மம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தாமரைகுளம் பதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story