குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.60 லட்சம்


குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.60 லட்சம்
x

உண்டியல்களில் ரொக்கம் ரூ 60 லட்சத்து 32 ஆயிரத்து 419 தவிர 87 கிராம் தங்கம், 850.600 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தூத்துக்குடி

தசரா திருவிழாவிற்கு பிரசித்திப் பெற்ற முத்தாரம்மன் கோவிலில் 18 நிரந்தர உண்டியல் உள்ளது. இந்த உண்டியல்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் செயல் அலுவலரும், துணை ஆணையருமான கோமதி முன்னிலையில் திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ 60 லட்சத்து 32 ஆயிரத்து 419 மற்றும் 87 கிராம் தங்கம், 850.600 கிராம் வெள்ளி இருந்தது.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தாண்டவன்காடு வே. கண்ணன், கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், கோவில் ஆய்வாளர் முத்துமாரியம்மாள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகாராஜன், கணேசன் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story