திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறையையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் தங்கவைக்கப்படும் 31 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. மேலும், சாமி தரிசனத்திற்கு 3 கிலோமீட்டருக்குமேல் மைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.






