பழனியில் முருகப்பெருமானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்


பழனியில் முருகப்பெருமானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்
x

நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் வாரவிடுமுறை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் வழிபட்டு செல்கின்றனர். அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில், கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் உள்ள பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வெளிப்பிரகாரத்தில் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தே முருகப்பெருமானை தரிசித்தனர்.

இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்று பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர். நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

1 More update

Next Story