திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு


திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
x

மே மாத சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியிடப்பட உள்ளன.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மே மாத சிறப்பு தரிசனம். ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியிடப்பட உள்ளன. சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனா சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீடு, இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள், பிப்ரவரி 21-ஆம் தேதியும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், பிப்ரவரி 24 ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story