ஜூன் மாதத்தின் முக்கிய தினங்கள், ஆன்மிக நிகழ்வுகள்

ஜூன் 4-ந்தேதி வாஸ்து பூஜை செய்து புதிய கட்டிடங்கள் கட்ட தொடங்குவது சிறப்பானதாக இருக்கும்.
ஜூன் மாதத்தின் முக்கிய நாட்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்பான விவரம் வருமாறு:
சுபமுகூர்த்த நாட்கள்
ஜூன் 5: வியாழக்கிழமை, தசமி திதி, உத்திரம் நட்சத்திரம், லக்னம் ரிஷபம். நல்ல நேரம்- காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
ஜூன் 6: வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி, அஸ்தம் நட்சத்திரம், லக்னம்-ரிஷபம். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
ஜூன் 8: ஞாயிற்றுக்கிழமை, திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரம், லக்னம்-ரிஷபம். காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை.
ஜூன் 16: திங்கட்கிழமை, பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம், லக்னம்-மிதுனம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
ஜூன் 27: வெள்ளிக்கிழமை, துவிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம், லக்னம்-மிதுனம், காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை.
தர்ப்பண தினங்கள்
ஜூன் 15: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 24: செவ்வாய்க்கிழமை - போதன அமாவாசை
ஜூன் 25: புதன்கிழமை)- அமாவாசை
பௌர்ணமி கிரிவலம்
ஜூன் 10: பௌர்ணமி தினம். செவ்வாய்க்கிழமையான அன்று மதியம் 12.27 மணிக்கு பௌர்ணமி தொடங்குகிறது. மறுநாள் (11-ந்தேதி புதன்கிழமை) மதியம் 1.53 மணி வரை பௌர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது நன்மை தரும்.
சபரிமலை கோவில் நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் ஜூன் மாதம் 4-ந்தேதியும் 5-ந்தேதியும், பிரதிஷ்டை தின பூஜைக்காக 2 நாட்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். ஜூன் 14-ந்தேதி வழக்கமான மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். 18-ந்தேதி வரை 6 நாட்கள் சபரிமலை ஆலயம் திறந்து இருக்கும்.
வாஸ்து பூஜை
ஜூன் 4-ந்தேதி வாஸ்து பூஜைகள் செய்வதற்கு ஏற்ற சுபநாளாகும். புதன்கிழமையான அன்று வாஸ்து புருஷன் 8 நாழிகை விழித்து இருப்பார். அதாவது அன்றைய தினம் காலை 9.58 மணி முதல் 10.34 மணி வரை அவர் விழித்து இருக்கும் காலமாகும். இந்த நேரத்தில்தான் வாஸ்து பகவான் பல்தேய்த்து, குளித்து, சாப்பிட்டு, வெற்றிலை போடும் நேரமாகும். இந்த சமயத்தில் வாஸ்து பூஜை செய்து புதிய கட்டிடங்கள் கட்ட தொடங்குவது சிறப்பானதாக இருக்கும்.
புனித நீராடும் தினம்
ஜூன் 9-ந்தேதி (திங்கட்கிழமை) புனித நீராட சிறந்த தினமாகும். அன்று நதிகளில் நீராடி முருகனையும், துர்க்கையையும் மனமுருக வழிபட்டால் வியாபாரிகளுக்கு அவர்களது வியாபாரத்திலும், தொழிலிலும் வெற்றி கிடைக்கும்.
காது குத்துதல்
குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உகந்த நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் காது குத்தலாம். அதுபோல ஜூன் 14-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் காது குத்துவது நல்லது. புது வாகனங்கள் வாங்கி ஓட்ட தொடங்குபவர்கள் ஜூன் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது.
சித்தர்கள் குருபூஜை தினம்
ஜூன் 7: அஸ்தலிங்க சுவாமிகள் 175-வது குரு பூஜை இடம் அய்யன்பேட்டை (காஞ்சிபுரம்-தாம்பரம் சாலை)
ஜூன் 8: மகான் சாங்கு சித்தர் ஜீவசமாதி கும்பாபிஷேகம் (கிண்டி)
ஜூன் 9: சிதம்பரம் சுவாமிகள் 365-வது குரு பூஜை, திருப்போரூர். சிவப்பிரகாச தேசிகர் குரு பூஜை, திருவண்ணாமலை, வீரசேகர ஞானதேசிகர் 114-வது குரு பூஜை, திருக்களார் (மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலை), தாண்டவராய சுவாமிகள்- நன்னிலம், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் 43-வது குரு பூஜை, கோட்டையூர் (காரைக்குடி அருகே), சண்முக பரதேசி சுவாமிகள் 83-வது குரு பூஜை, சிவராமபேட்டை (தென்காசி-மதுரை சாலை)
ஜூன் 10: நாகமுனி சுவாமிகள் 129-வது ஜெயந்தி விழா, பூங்கோடு (ஆற்காடு-திண்டிவனம் சாலை), பரமஹம்ச ஓங்கார சுவாமிகள், கோடம்பாக்கம்.ஜூன் 12-ந்தேதி - திருஞான சம்பந்தர் குரு பூஜை
ஜூன் 14: குமரகுருபரர் குரு பூஜை
ஜூன் 25: சோமப்ப சுவாமிகள் 57-வது குரு பூஜை, திருப்பரங்குன்றம் (மதுரை)
ஜூன் 26: சிவஞான பாலசித்தர் குரு பூஜை, மயிலம் முருகன் ஆலயம், சற்குரு சுவாமிகள் 115-வது குரு பூஜை, மாயகுண்டு (தேனி அருகே), மவுனகுரு சுவாமிகள் 89-வது பூஜை, பெரியகுளம் வராகநதி பாலம் அருகே.






