கோயில்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா

கோயில்விளையில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள கோயில்விளை அருள்மிகு மூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்த 12-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் 8-ம் நாளான இன்று (19-ம் தேதி) காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு தீபாராதனையும், 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.
இன்று மாலை 4 மணிக்கு இசை தட்டும், 6 மணிக்கு மாவிளக்கு வழிபாடும், இரவு 8 மணிக்கு நாதஸ்வரமும், 9.30 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், 12.30 பெருமாள் சுவாமி கதை வில்லிசையும், 1.30 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு பத்திரகாளி அம்மன் கதை வில்லிசையும், 2:30 மணிக்கு அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
நாளை 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7 மணிக்கு நாதஸ்வரம், 8 மணிக்கு சிங்காரி மேளம், 9.30 மணிக்கு முத்தாரம்மன் கதை வில்லிசை, 11 மணிக்கு சிங்காரிமேளம், நாதஸ்வரம் முழங்க அம்மனுக்கு கும்பம் தரித்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருதல், பகல் 1:30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார உச்சகால தீபாராதனை, பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு காலசுவாமி கதை வில்லிசை, இரவு 7:30 மணிக்கு காலசுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு மாரியம்மன் கதை வில்லிசை, 10 மணிக்கு மாரியம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 10.30 மணிக்கு உஜ்ஜையினி மாகாளி அம்மன் கதை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு உஜ்ஜையினி மாகாளி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஊட்டுப் படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாளை மறுநாள் 21-ம் தேதி புதன்கிழமை காலை 5:30 மணிக்கு நாதஸ்வரம் மற்றும் சிங்காரி மேளம், 6 மணிக்கு சிங்காரி மேளம், நாதஸ்வரம் முழங்க அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல், வாகன பவனியை தொடர்ந்து சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி, 10 மணிக்கு சுடலைமாடசுவாமி கதை வில்லிசை, நண்பகல் 12. 30 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது.






