கார்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்


கார்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
x

ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்ததும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை சுத்தம் செய்து புனிதப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெற்றது.

இதில், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர், நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலிக்கட்டு உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த நறுமணக் கலவை பூசப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்ததும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் வாகன சேவை நடைபெறும். எனவே, நவம்பர் 17 முதல் 25 வரை கோவிலில் அனைத்து அர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story