ராஜாளிக்காடு அங்காளம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா


ராஜாளிக்காடு அங்காளம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
x

உலக நன்மை வேண்டியும், நன்றாக மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் லட்சார்ச்சனை நடைபெற்றது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அடுத்த ராஜாளிக்காட்டில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி ஆலயம். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 20-வது ஆண்டு லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், நன்றாக மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் நடைபெற்ற லட்சார்ச்சனையில், ஏராளமானோர் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து அங்காளம்மனை வழிபட்டனர்.

லட்சார்ச்சனையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு அன்ன வாகனத்தில் அங்காளம்மன் எழுந்தருளி, கோவிலை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story