கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

லட்சார்ச்சனையைத் தொடர்ந்து அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சாச்சனை விழா நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனின் திருநாமங்களை ஒரு லட்சம் முறை உச்சரித்து அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






