திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன்களுக்கு உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்யலாம்: தேவஸ்தானம் தகவல்


திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன்களுக்கு உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்யலாம்: தேவஸ்தானம் தகவல்
x

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன்களுக்கு உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 31-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டுகிறது. எனவே 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா, சந்திரகிரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய டோக்கன்கள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 6, 7, 8-ந்தேதிகளுக்காக தினமும் 5 ஆயிரம் தரிசன டோக்கன்கள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

அதற்கு எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல் (இ.டிப்) முறையிலான முன்பதிவு வருகிற 27-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 29-ந்தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான இணையதளம், மொபைல் ஆப் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளலாம். திருமலை, திருப்பதி, ரேணிகுண்டா, சந்திரகிரி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 1 பிளஸ் 3 முறையில் எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல் முறை பதிவுக்காக விண்ணப்பிக்கலாம்.

31-ந்தேதி மதியம் 2 மணிக்கு எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல் முறையில் தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தம் 3 நாட்களுக்கு 15 ஆயிரம் டோக்கன்களில் திருப்பதி, ரேணிகுண்டா, சந்திரகிரி ஆகிய பகுதி மக்களுக்கு தினமும் 4 ஆயிரத்து 500 டோக்கன்களும், திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு தினமும் 500 டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இதை உள்ளூர் பக்தர்கள் கவனத்தில் கொண்டு குறிப்பிடப்பட்ட நாட்களில் எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல் முறையில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story