மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்


மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
x

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில்.

திருச்சி

திருச்சி அருகே உள்ள மண்ணச்சல்லூர் நகரத்தில் இருக்கிறது பூமிநாதர் திருக்கோவில். இந்த திருத்தலத்தின் முழுமையான பெயர், "அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி" ஆலயம். நிலம்- மண்- பூமி தொடர்பான மொத்தம் 16 பிரச்சனைகளை மற்றும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து நாளை காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்

1 More update

Next Story