அமாவாசை விழா.. மேல்மலையனூர் கோவிலில் நாளை மறுநாள் ஊஞ்சல் உற்சவம்


அமாவாசை விழா.. மேல்மலையனூர் கோவிலில் நாளை மறுநாள் ஊஞ்சல் உற்சவம்
x

அமாவாசையன்று அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

விழுப்புரம்

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்திற்கான அமாவாசை விழா (மகாளய அமாவாசை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story