திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்


திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
x

திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, 28ஆம் தேதி முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

நேற்று வள்ளி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சுவாமிகளுக்கு காப்புக் கட்டுதல் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து முருகன், வள்ளிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story