பூதங்குடி புனித அந்தோணியார் ஆலய பெரிய தேர் பவனி

தேர் பவனியை முன்னிட்டு நாகூர் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
நாகப்பட்டினம்
நாகூர் அருகே உள்ள பூதங்குடியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நாகூர் பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. பின்னர் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில் சம்மனசு, மாதா அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர். தேர் சப்பரத்தை பங்குத்தந்தை புனிதம் செய்து தொடங்கி வைத்தும் தேர் புறப்பட்டது.
ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனியானது வாத்திய இசை முழக்கத்தோடு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிபட்டனர்.
Related Tags :
Next Story






