பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோவில் திருவிழா

சேத்துக்கால் மாரியம்மன் பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருளபாலித்தார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் எழுந்தருளியுள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 24-ஆம் தேதி சேத்துக்கால் மாரியம்மன் பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27-ஆம் தேதி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
28-ஆம் தேதி மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தலும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும், கோவில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற்றது. புதன்கிழமை சேத்துக்கால் மாரியம்மன் பரமத்தியின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருளபாலித்தார். பின்னர் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






