வருஷாபிஷேகம்: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர்

சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பாக நடைபெற்றது.
மகா யாகம் வளர்க்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பல்வேறு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






