நவம்பர் 2025: திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 17-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை 9 நாட்களுக்கு வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
இந்த மாதம் (நவம்பர்) திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பத்மாவதி தாயார் கோவில்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இந்த மாதம் (நவம்பர்) கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை தவிர சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிழாக்கள் நடக்க உள்ளன. வருகிற 11-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. 16-ம்தேதி காலை லட்ச குங்குமார்ச்சனை, மாலை வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம்.
17-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை 9 நாட்களுக்கு வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா, 7, 14 மற்றும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணியளவில் திருச்சி வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பலராம கிருஷ்ணசுவாமி கோவில்
சுந்தரராஜ சுவாமி கோவிலில் 3 மற்றும் 30-ம் தேதி உத்தர பத்ர நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணியளிவில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் திருச்சி வாகனத்தில் உற்சவர் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பலராம கிருஷ்ணசுவாமி கோவிலில் 7-ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை திருச்சி வாகன ஊர்வலம் நடக்கிறது.
சூரியநாராயணசுவாமி கோவிலில் 16-ம் தேதி ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திருச்சி வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணசுவாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சானூர் சீனிவாச சுவாமி கோவிலில் 8, 15, 22, 29-ம் தேதிகளில் மூலவர் சீனிவாச சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
அப்பலாயகுண்டா கோவில்
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் 7, 14, 21, மற்றும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமைகளில் தினமும் காலை 7 மணிக்கு வஸ்திர அலங்கார சேவை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. 4-ம் தேதி காலை 8 மணியளவில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு கல்யாணோற்சவம், 2, 9, 16, 23, மற்றும் 30-ம் தேதிகளில் பிரசன்ன ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






