பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம்

வந்தவாசி அருகே 5 பெருமாள் கோயில் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை
வந்தவாசியை அடுத்த தெய்யார் கிராமத்தில் பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி தெய்யார் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், சோகத்தூர் ஸ்ரீயோக நரசிம்மர் கோயில், பாப்பநல்லூர் ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயில், நல்லூர் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில், மூடூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களில் எழுந்தருளி தெய்யாரில் வீதியுலா சென்றனர்.
பின்னர் அந்த கிராமத்தில் உள்ள பஞ்ச கருட சேவை மைதானத்தை அடைந்த உற்சவர்களுக்கு ஸ்ரீநிகமாந்த தேசிகருடன் தர்ஸன தாம்பூலம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் சுவாமிகளுக்கு மஹா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மஹோத்ஸவ ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடு கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story






