திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம்


திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பங்குனி தேரோட்டம்
x

பகவான் ஜெகநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோவில். தமிழகத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பெருமாள் கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது.

ஆண்டுதோறும் இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 3-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

விழா நாட்களில் தினமும் பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்குனி உத்திர திருவிழாவின் 9-வது நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் வாசல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார்.

சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், கோவில் செயல் அலுவலர் கிரிதரன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திருப்புல்லாணி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர்.

1 More update

Next Story