திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்


திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்
x

சிறப்பு அலங்காரத்தில் சவுரிராஜ பெருமாள்

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பவித்ர உற்சவம் நேற்று அங்குரார்ப்பணம் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு பூஜையில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான உதய கருட சேவை வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

1 More update

Next Story