புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

புகழி மலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
கரூர்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ளது புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். ஆறுநாட்டார் மலை என்று அழைக்கப்படும் புகழி மலையில் அமைந்துள்ள இக்கோவில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பௌர்ணமி தினத்தில் இங்கு கிரிவலம் நடைபெறும்.
அவ்வகையில் புரட்டாசி பௌணர்மியை முன்னிட்டு சிவனடியார்கள், பக்தர்கள் என ஏராளமானோர் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். அவர்கள், புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான், சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப் பெருமான் மற்றும் பாலசுப்பிரமணியரை போற்றி பாடியபடி சென்றனர்.
Related Tags :
Next Story






