அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிறப்பு அலங்காரத்தில் உப்புபாளையம் வீரமாத்தியம்மன்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் உப்புபாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டு உள்ள அம்மன் தமோ குணத்தில் பகவதியாகவும், ரஜோ குணத்தில் துர்கையாகவும், சத்துவ குணத்தில் அம்பாளாகவும், 64 கலை வடிவங்களாகவும், 84 லட்சம் யோனி பேதங்களாகவும், 64 கலை உபசார பூஜைக்கு உரியவளாகவும் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் முக்கிய நாட்களில் வீரமாத்தியம்மன், விவேக விநாயகர், சப்த கன்னியர்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

அவ்வகையில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகையான திரவியங்களால் நேற்று அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வீரமாத்தியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் சேமங்கி மாரியம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன், குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், உப்பு பாளையம் மாரியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன் கோவில், புன்னம் மாரியம்மன் கோவில், பேரூர் அம்மன் கோவில், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், பத்ரகாளி கண்டியம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், புங்கோடை குளத்துப்பாளையம் தங்காயி அம்மன் கோவில், தளவாபாளையம் மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், நானப்பரப்பு மாரியம்மன் கோவில்,

நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள துர்க்கா தேவி அம்மன் கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பல்வேறு அம்மன் கோவில்களில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story