சிறுமலை வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு


சிறுமலை வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு
x

சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். அவ்வகையில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர்புரத்தில் வெள்ளிமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சோமவாரத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் நல்லெண்ணெய், அரிசி மாவு, திருமஞ்சன பொடி, வாசனை திரவியம், பால், தயிர், எலுமிச்சம் பழச்சாறு, பழங்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், அன்னம் என 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story