புன்னக்காயல் மாதா கோவில் தேர் பவனி

தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குழு ஜான் பென்ஷன் அடிகளார் திருப்பலியை நிறைவேற்றியபின் தேர் பவனி நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள மீனவ கிராமமான புன்னக்காயலில் அமைந்துள்ள தூய ராஜகன்னி மாதாவின் ஆலய 474-வது ஆண்டு திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் திருப்பலியும் மாலையில் மறையுறை நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை விழாவின் சிறப்பு அம்சமாக சிறுவர் சிறுமியர் புது நன்மை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருச்செந்தூர் அலிளி நகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார் தலைமையில் நற்கருணை பவனி நடைபெற்றது.
இதில் ஸ்ரீவைகுண்டம் பங்குத் தந்தை பிளேவியன் அடிகளார், வீரபாண்டியன் பட்டணம் பங்குத் தந்தை அலாசிஸ் அடிகளார், வீரபாண்டியன் பட்டணம் உதவி பங்குத்தந்தை விஜின் தாஸ் அடிகளார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நற்கருணை பவனி ஊரின் முக்கிய வீதிகள் மற்றும் கடற்கரை வரை சென்று மீண்டும் ஆலயம் திரும்பியது .
நேற்று (சனிக்கிழமை) மாலை பாளையங்கோட்டை பங்குத்தந்தை ஜெரி அடிகளார் தலைமையில் ஆராதனை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி குரூஸ்புரம் பங்கு தந்தை கிஷோக் அடிகளார், புன்னக்காயல் பங்கு தந்தை அந்தோணி சகாய டைட்டஸ் அடிகளார், துணை பங்குத்தந்தை ஜெரால்டு அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர.
விழாவின் சிகர நிகழ்வான தேர் பவனி இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலையில் தூய ராஜகன்னி மாதா தேரின் முன்பு திருப்பலி நடைபெற்றது. இதனை சேர்ந்த பூமங்கலம் பங்குத்தந்தை ராயப்பன் பத்ரோஸ் அடிகளார் நிறைவேற்றினார். தொடர்ந்து காலை 6.30 மணியளவில் ஆலயத்தில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குழு ஜான் பென்ஷன் அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து புனித ராஜகன்னி மாதாவின் திரு உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து மாதாவை வழிபட்டனர். தேர் பவனியைத் தொடர்ந்து வெளியூர் பக்தர்களுக்கான சிறப்பு திருப்பலி உடன்குடி பங்குத் தந்தை டிமெல் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
திருவிழாவில் ஆத்தூர், சேர்ந்த பூமங்கலம், ஆறுமுகநேரி, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, பழைய காயல் போன்ற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.






