தலைமைத்துவத்தில் தூய்மை

தலைமைத்துவத்தில் தூய்மையுடன் இருக்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய முன்மாதிரி இறைமகன் இயேசு கிறிஸ்துவே.
உலகம் தனதாக்கிக் கொள்வதை முதன்மைப் படுத்துகிறது, கிறிஸ்தவம் நல்ல தலைமையேற்றலை முதன்மைப்படுத்துகிறது. திறமையான தலைமையை உலகம் எதிர்நோக்குகிறது, தூய்மையான தலைமையை கிறிஸ்தவம் எதிர்நோக்குகிறது. எவ்வளவு சிறப்பாய் தலைமை ஏற்கிறோம் என்பதை விட எவ்வளவு சிறப்பானவராய் இருந்துகொண்டு தலைமை ஏற்கிறோம் என்பதையே கிறிஸ்தவம் பார்க்கிறது.
இறையரசு என்பது நாம் எதைப் பற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை மட்டுமல்ல, எப்படிப் பற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் கவனிக்கிறது.
யோசேப்பு, பார்வோன் வீட்டில் முக்கியப் பதவியில் செயலாற்றியபோது அவரை தனித்துவ நபராய் அடையாளப்படுத்தியது அவரது ஞானமோ, திறமையோ அல்ல. அவருடைய தூய்மையே. பஞ்ச காலத்தில் எகிப்தின் செல்வத்தை எல்லாம் கவனித்துக் கொண்டார். ஆனால் ஒருபோதும் அதற்கான பெருமை தனக்குக் கிடைக்க வேண்டும் என செயல்பட்டதில்லை.
பார்வோனின் வீட்டில் பாவம் அழைக்கையில் ஆர்வத் தீயில் பற்றியெரியவில்லை, அவர் தூய்மைத் தீயில் புடமிட்டுக் கொண்டார். பார்வோனின் மனைவிகளுக்கு மயங்குபவர்களால், இறைவனின் அரண்மனையை நிர்வகிக்க முடியாது.
யூதாஸ், இயேசுவின் ஊழியத்திலேயே பணத்தைக் கையாளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. எவ்வளவு பெரிய பொறுப்பு, எவ்வளவு புனிதமான பொறுப்பு. ஆனால் எப்போது தூய்மை விடைபெறுகிறதோ, அப்போது பேராசை களம் புகுகிறது. அவர் பணத்தைக் கையாண்டார், ஆனால் இதயத்தைக் கையாளாமல் விட்டு விட்டார்.
உங்களது சிந்தனைகளைச் சரி செய்யாவிட்டால் நீங்கள் மெசியாவையே விற்று விடுவீர்கள். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு பராமரிக்கும் தலைமைப்பணி கொடுக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமில்லாத ஏதேன் தோட்டத்தை நிர்வாகிக்கும் பொறுப்பு. ஆனால் சாத்தானின் ஆசை வார்த்தைகள் கிசுகிசுத்தவுடன் அவரது தூய்மை சமரசத்துக்குள்ளானது. அவரது தலைமைத்துவம் தகர்ந்தது.
தாலந்துகளைப் பெற்றவர்கள் உண்மையுடனும், நேர்மையுடனும், பணிசெய்ய வேண்டும் என்பதே இறைவனின் அழைப்பு. எவ்வளவு அதிகமாய் ஈட்டுகிறோம் என்பதல்ல, எவ்வளவு நேர்மையாய் உழைக்கிறோம் என்பதே முதன் மையாகிறது.
நெகேமியா கையூட்டுகளை வெறுத்தவர். ஓய்வின்றி உழைத்தவர். பொதுப்பணத்தை தவறாய்ப் பயன்படுத்தவே இல்லை. அவர் இறைவனின் பார்வையில் நேர்மையான தூய்மையான பணியாளனாய், தலைவராய் இருந்தார். அவர் மதில் சுவரை மட்டும் கட்டியெழுப்பவில்லை. கறைபடியாத கரங்களைக் கொண்டவர் எனும் வரலாற்றையும் கட்டி எழுப்பினார்.
பணியில் புனிதம் என்பது பாவத்தைத் தவிர்ப்பது மட்டுமல்ல, இறைவன் முன்னிலையில் ஒளிவு மறைவில்லாமல் வாழ்வது. நமது காணிக்கைகள் அன்பின் வெளிப்பாடாய் இருக்கிறதா?. அல்லது உணர்விலிருந்து தப்புவதற்கான செயலாய் இருக்கிறதா? நாம் ஏழைகளுக்கு தன்னலமின்றி உதவுகிறோமா? அல்லது விளம்பரத்துக்காக நெருங்குகிறோமா?
நமது புனிதம் என்பது நமது செயல்களில் வெளிப்படும். நமது வார்த்தைகளில் வெளிப்படும். நமது உடல் அசைவுகளில் வெளிப்படும். நமது முடிவுகளில் வெளிப்படும். நாம் கிறிஸ்துவின் நடமாடும் நற்செய்திகள். இறையரசைச் சுமந்து திரிபவர்களை இந்த எண்ணமே வலுப்படுத்தும்.
தப்புவதற்கான செயலாய் இருக்கிறா. நாம் குனது பாடாய் இருக்கிறதா?. அல்லது உணர்விலிருந்து களுக்கு தன்னலமின்றி உதவுகிறோமா? அல்லது விளம்பரத்துக்காக நெருங்குகிறோமா?
நமது புனிதம் என்பது நமது செயல்களில் வெளிப்படும். நமது வார்த்தைகளில் வெளிப்படும். நமது உடல் அசைவுகளில் வெளிப்படும். நமது முடிவுகளில் வெளிப்படும். நாம் கிறிஸ்துவின் நடமாடும் நற்செய்திகள். இறையரசைச் சுமந்து திரிபவர்களை இந்த எண்ணமே வலுப்படுத்தும்.
எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய கூட்டத்துக்குத் தலைவராக வேண்டும் எனும் சிந்தனை இன்றைக்கு பரவலாய் உள்ளது. அவர்களுக்கு தாவீதின் வாழ்க்கை ஒரு பாடம். அவர் சில ஆடுகளை மேய்ப்பவராய் இருந்து, அதில் நேர்மையும் திறமையும் உண்மையும் காட்டியதால் தான் நாடுகளை மேய்க்கும் நிலைக்கு உயர்த்தப்பட் டார். சிறு கூட்டமான ஆடுகளை மேய்க்க முடியாதவர்களால் பெரிய நாடுகளைக் கையாள முடியாது.
தலைமைத்துவத்தில் தூய்மையுடன் இருக்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய முன்மாதிரி இறைமகன் இயேசு கிறிஸ்துவே. அவரே நம் வழி காட்டி. அதிகாலையில் எழுந்து ஜெபிப்பதும், நலமாக்குதலில் கனிவை வெளிப்படுத்தியதும், எங்கும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாததும், தன்னைக் காட்டிக் கொடுப்பவனின் கால்களைக் கூட கழுவியதும் இயேசுவே தூய்மையான, தாழ்மையான தலைமை என்பதற்கு உதாரணம்.
தந்தையை இயேசு எப்படி மகிமைப்படுத்தினார்? “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்” என்கிறார் இயேசு.
நாம் இறைவனை மாட்சிப்படுத்துவது நமக்கான பணியை தூய்மையுடனும், நேர்மையுடனும் செய்து முடிப்பதன் வழியாகத்தான். எனவே இறைவனைக் கொண்டே நமது செயல்களை மையப்படுத்துவோம். ‘இது என்னுடையதல்ல, இறைவனுடையது’ எனும் சிந்தனை கொள்வோம். எனது கட்டுப்பாட்டில் மக்கள் இருப்பதல்ல, இறைவனின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதே முக்கியம் என்பதை உறுதிபடுத்துவோம். ஏனெனில் நம் கையில் என்ன இருக்கிறது என்பதை விட, நம் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதே இறைவனுக்கு முக்கியம்.
நாம் பெற்றோராய் இருந்தால் தூய்மையான இதயத்தோடு பிள்ளைகளை வழிநடத்த வேண்டும். போதகராய் இருந்தால் கவனமாய் கடவுளின் பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். தலைவராய் இருந்தால் மக்களை மாற்றுபவர்களாக இருக்க வேண்டும். நம்பிக்கையாளராய் இருந்தால் நற்செய்தியின் தூதுவர்களாக வேண்டும்.
வாழ்வில் புனிதத்தைக் காத்துக் கொள்வோம். நம் அழைப்பில் தூயவர்களாய் இருப்போம், ஏனெனில் நம்மை அழைத்தவர் தூயவர்.
-சேவியர், சென்னை.






