திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்

குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ருத்ர யாக திருவிழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் பங்கேற்றார்.
தஞ்சாவூர்
குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று ருத்ர யாக திருவிழா நடைபெற்றது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் சிவஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை தாங்கினார்.
ருத்ர யாத்தையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் கோவில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மகா யாகசாலையில் ருத்ர யாகம் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆதீனம் சிவஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், யாகசாலையில் 108 விதமான ஹோம திரவியங்கள் மற்றும் 50 லிட்டர் நெய் ஆகியவற்றை விட்டு யாக பூஜை செய்தார்.
யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ருத்ர யாகத்திற்கான ஏற்பாடுகளை ஆதின நிர்வாக அலுவலர் அசோக், ஆலய அர்ச்சகர் கார்த்திகேய சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






