மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி காலை கோவில் திரு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டர் பிரம்மதத்தர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்
நாளை (பிப்ரவரி 13) முதல் வருகிற 17-ம் தேதி வரை தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை நெய் அபிஷேகமும், 16-ம் தேதி மாலை சஹஸ்ர கலச பூஜையும், 17-ம் தேதி சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது.
Related Tags :
Next Story