சங்கடஹர சதுர்த்தி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப்பெருமான்


சங்கடஹர சதுர்த்தி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப்பெருமான்
x

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், பொத்தனூர் வெங்கமேடு வல்லப கணபதி கோவில் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அதேபோல் பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள வல்லப கணபதி கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்னர்.

கிருஷ்ணகிரி

சங்கடஹர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்–ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

இதே போல் கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், டான்சி வளாகம் செல்வ விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில், என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள வினை தீர்க்கும் விநாயகருக்கு சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி விநாயகருக்கு பால்,தயிர்,பன்னீர்,இளநீர் சந்தனம்,பூபதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சொர்ணாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் அம்மகளத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராமசாமி, அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

1 More update

Next Story