சாத்தான்குளம்: புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது


சாத்தான்குளம்: புனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது
x

புனித அன்னம்மாள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 30-ந்தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது.

தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் பங்குக்கு உட்பட்ட சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. மாலை 6.30 மணி அளவில் சொக்கன் குடியிருப்பு அருள் பணி தந்தை ஜான் பிரிட்டோ தலைமை வகித்து, கொடி ஏற்றினார்.

சொக்கன் குடியிருப்பு அருட்தந்தை லியோன் முன்னிலை வகித்தார். மன்னார்புரம் பொதுநிலையில் பணி இயக்குனர் ரியோசியல் பெப்பி மறையுறை வழங்கினர்.

இத்திருவிழா வரும் 31-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் 8-ம் நாள் வரை சிதம்பரபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமையில் ஜெபமாலை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9-ம் நாளான வருகிற 30-ந்தேதி காலை 8 மணிக்கு சொக்கன் குடியிருப்பு அருட்தந்தை லியோன் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மாலை திருவிழா, மாலை ஆராதனை நடக்கிறது.

தைலாபுரம் பங்குத்தந்தை ராபின் மறைவுரை வழங்குகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது. 10-ம் நாளான 31-ந்தேதி காலை 9 மணிக்கு சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

முதலூர் அருட்தந்தை திலகர் முன்னிலை வகிக்கிறார். தென் மண்டல பொறுப்பு அருட்தந்தை வெனி இளங்குமரன் மறையுறை வழங்குகிறார். மாலை 3 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

இரவு 7 மணிக்கு நன்றி ஆராதனை, கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் இறை மக்கள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story