இருக்கன்குடியில் சிறப்பு வழிபாடு- நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்


இருக்கன்குடியில் சிறப்பு வழிபாடு- நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
x

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் பல்வேறு அம்மன் கோவில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 More update

Next Story