செய்யூர் கந்தசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை


செய்யூர் கந்தசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
x

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜை செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள கந்தசுவாமி திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருப்புகழில் பாடப்பட்ட பூத கண வேதாளங்கள் கொண்ட இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியிருக்கிறார்.

இந்தக் கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை பைரவரிடம் கூறுவதும், அதனை கந்தசுவாமி நிறைவேற்றுவார் என்பதும் ஐதீகம். அதன் அடிப்படையில் பக்தர்களின் கஷ்டங்கள் தீர தேய்பிறை அஷ்டமி அன்று 27 நட்சத்திரங்களுக்கான பூத கண வேதாளங்களுக்கு பூஜை செய்து பைரவரை வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் விநாயகர் சங்கல்பத்துடன் பூஜை தொடங்கியது. மாலை 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜை, 7 மணிக்கு மூலவர் அபிஷேகம், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்ப அர்ச்சனை நடைபெற்றது.

பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ற பூத கண வேதாளங்களுக்கு சிறப்பு பூஜை செய்து விளக்கேற்றி வழிபட்டனர்.

1 More update

Next Story