உடுமலை சின்ன வாளவாடி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்


உடுமலை சின்ன வாளவாடி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
x

கல்யாண கோலத்தில் எழுந்தருளிய மாரியம்மன்- சூலத்தேவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உடுமலை அடுத்த சின்ன வாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் சூலத் தேவருக்கு பால்,சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யாகம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி, அக்னி சாட்சியாக மங்கள வாத்தியம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. பின்னர் கல்யாண கோலத்தில் எழுந்தருளிய மாரியம்மன் - சூலத்தேவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து மாவிளக்கு மற்றும் பொங்கல் எடுத்தல் நிகழ்வும், மதியம் 3 மணிக்கு பூவோடு எடுத்தலும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கம்பம் சக்தி கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

விழாவின் இறுதி நிகழ்வாக நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மகாபிஷேகம், மஞ்சள் நீராடுதல் நிகழ்வும், மதியம் 2 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதே போன்று பழையூர் மாரியம்மன் கோவிலிலும் திருவிழா தொடங்கி நடைபெற்ற வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

1 More update

Next Story