திருவாதவூர் வரத பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்


திருவாதவூர் வரத பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்
x

விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று தேர் இழுத்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வரத பிடாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த பத்து தினங்களாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரத வீதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று அம்மனின் தேரை வடம் பிடித்து இழுத்து, பின்னர் கோவிலில் நிலை சேர்த்தனர்.

1 More update

Next Story