வளர்பிறை அஷ்டமி: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை


வளர்பிறை அஷ்டமி:  திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு  பூஜை
x

திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில், தேவார பாடல் பெற்ற கால பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கடன் நிவர்த்தீஸ்வரர் என அழைக்கப்படும் ரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். பிரதி திங்கள் தோறும் மூன்று கால சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இங்கு தேவார பாடல் பெற்ற கால பைரவர் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். இந்த பைரவருக்கு அஷ்டமி நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

அவ்வகையில் ஐப்பசி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ புஷ்ப அலங்காரம் வடை மாலை சாத்தப்பட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையோடு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story