கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் வண்டிவேஷம் ஊர்வலம்


கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் வண்டிவேஷம் ஊர்வலம்
x

வண்டிவேஷ ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் விதவிதமான ஆடைகள் அணிந்து நாடகம் மற்றும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர்.

தேனி

கம்பம் ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது. அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு, போதை விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி , சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டி, மாவிளக்கு எடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான இன்று முளைப்பாரி ஊர்வலம் , டிராக்டரில் வண்டி வேஷம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம், இறை வழிபாடு குறித்த பாடல் மற்றும் நாடகம், கோமாளி நாடகம், கிராமிய மற்றும் பழைய புதிய சினிமா பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. சிறுவர், சிறுமிகள் விதவிதமான ஆடைகள் அணிந்து நாடகம் மற்றும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர்.

கம்பம் தெற்கு தெருவில் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம், உழவர்சந்தை, கூலத்தேவர் முக்கு, நாட்டுக்கல், வேலப்பர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக வந்து பகவதியம்மன் கோவில் நிறைவடைந்தது. கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு வண்டிவேஷ ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

1 More update

Next Story