துபாய் மெட்ரோ விரிவாக்கம்.. 30 கி.மீ. புளூ லைன் பாதைக்கு டெண்டர்


துபாய் மெட்ரோ விரிவாக்கம்.. 30 கி.மீ. புளூ லைன் பாதைக்கு டெண்டர்
x

புதிய வழித்தடத்தில் 15.5 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 14.5 கி.மீ. உயர்மட்ட பாதையாகவும் இருக்கும்.

துபாய் மெட்ரோவில் தற்போது சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்கள் உள்ள நிலையில், மூன்றாவதாக நீல நிற (புளூ லைன்) வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. புதிய வழித்தடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் டெண்டர் கோரி உள்ளது.

ஏற்கனவே இருக்கும் சிவப்பு மற்றும் பச்சை வழித்தடங்களுடன் இந்த புதிய வழித்தடமும் இணைக்கப்படும். புதிய வழித்தடத்தின் மொத்த நீளம் 30 கி.மீ. ஆகும். இதில் 15.5 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 14.5 கி.மீ. உயர்மட்ட பாதையாகவும் இருக்கும். 14 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story