2022 உலகக் கோப்பை கால்பந்து : பிரமாண்டமாக நடைபெற உள்ள தொடக்க விழா.! : நேரடி ஒளிபரப்பு எப்போது ? எங்கு பார்க்கலாம் ?முழு விவரம்


2022 உலகக் கோப்பை கால்பந்து : பிரமாண்டமாக நடைபெற உள்ள தொடக்க விழா.! : நேரடி ஒளிபரப்பு எப்போது ?  எங்கு பார்க்கலாம் ?முழு விவரம்
x
தினத்தந்தி 20 Nov 2022 3:51 PM IST (Updated: 20 Nov 2022 4:00 PM IST)
t-max-icont-min-icon

தொடக்க நாளான இன்று ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.

தொடக்க நாளான இன்று ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள 60 அயிரம் இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

தொடக்க லீக் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னதாக போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.தென்கொரியாவை சேர்ந்த பி.டி.எஸ். இசைக்குழுவினரின் ஆட்டம் பாட்டம் நடைபெறுகிறது.

தொடக்க விழா இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.

தொடக்க விழா ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்போர்ட்ஸ்18 ஹெச்.டி டிவியில் ஒளிபரப்பப்படும்.

மேலும் ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

1 More update

Next Story