உலக கோப்பை கால்பந்து: செர்பியா - கேமரூன் இடையேயான ஆட்டம் டிரா


உலக கோப்பை கால்பந்து: செர்பியா - கேமரூன் இடையேயான ஆட்டம் டிரா
x

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் சேர்ந்த கேமரூன் மற்றும் செர்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் கேமரூன் அணி முதல் கோலை போட்டாலும் செர்பியாவின் கையே தான் ஓங்கியிருந்தது.

45 நிமிடங்கள் முடிந்தவுடன் கூடுதல் நேரம் கொடுக்கப்படும். அதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட செர்பியா வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 2 - 1 முன்னிலையுடன் முதல் பாதியை முடித்தனர். 2வது பாதி தொடங்கியவுடனும் மேலும் ஒரு கோலை போட்டு 3 - 1 என மாற்றி அமைத்தனர். இதனால் செர்பியா வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் இருந்து கேமரூன் அணி அதிரடி காட்டியது. அந்த அணி செர்பியாவை போன்றே அடுத்தடுத்த நிமிடங்களில் 2 கோல்களை அடித்ததால் 3 - 3 என சமமானது. இதனால் ஆட்டமும் பரபரப்படைந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் கூட வெற்றி பெற்றிவிடலாம் என்ற சூழலில் இரு அணிகளும் கடுமையாக போராடினர். ஆனால் கடைசியில் டிராவிலேயே முடிந்தது


Next Story