உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்..!


உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்..!
x

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளது.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதுகின்றன.

* மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

* இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா அணிகள் மோதுகின்றன.

* நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெல்ஜியம் - கனடா ஆகிய அணிகள் மோதுகின்றன.


Next Story