உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ..! பெல்ஜியம் தொடரிலிருந்து வெளியேறியது


உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ..! பெல்ஜியம்  தொடரிலிருந்து வெளியேறியது
x
தினத்தந்தி 1 Dec 2022 5:11 PM GMT (Updated: 1 Dec 2022 5:14 PM GMT)

தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

குரூப் 'எப்' பிரிவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடந்த போட்டியில் பெல்ஜியம் - குரோஷியா அணிகள் மோதின .தொடக்கம் முதல் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0- 0 என டிரா ஆனது.இதனால் 3 போட்டியில் 1 வெற்றி ,2 டிரா என குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது .பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி 1 வெற்றி , 1 டிரா , 1 தோல்வி என தொடரிலிருந்து வெளியேறியது.


Next Story